News

பெரிய பட்ஜெட் படம் வேண்டாம் என கூறிய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.​

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், நம்மிடையே சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இயற்கை மனித உயிரினத்தை “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாழ்கிற அடிப்படை தகுதியோடு தான் படைக்கிறது. அதன்பின், எதை எல்லையாக, சொந்தமாக, பகையாக கொண்டிருக்கிறோம் என்பது நம்முடைய பயணத்தில் தான் இருக்கிறது. இந்த அடிப்படையை பேசும் கதையாக தான் இப்படம் இருக்கும்.

“2012 முதல் 2014 வரை 2 வருடம் ஆய்வு செய்து அதன்பின் தான் இக்கதையை படமாக்கும் வேலையில் இறங்கினேன். இரண்டு நாயகிகள், ஒரு நாயகன், ஒரு பழங்கால தேவாலயத்தில் சந்திக்கும்போது நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் தான் இப்படம். இப்படத்தின் முக்கிய ஹீரோ இசை தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இசை படம் நெடுக ஒரு பயணமாகவே அமைந்திருக்கிறது.

புறம்போக்கு படத்தில் நான் இணை இயக்குனராக பணிபுரிந்த போதே இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் என்னிடம் கதை கேக்க சொல்லி விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னார். முதல் கதை பெரிய பட்ஜெட் வேண்டாம் என்றார், வேறு கதை சொல்லுங்க என்றார் அதுதான் இப்படம். விஜய் சேதுபதி இல்லை என்றால் இப்படமே இல்லை” என்றார்.

Related Posts