News

திரையுலகிற்கும், மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய தல அஜித்!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டது மற்றும் பங்குச் சந்தைகள் நொறுங்கியுள்ளன. வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகின்றன.

கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்காக பி.எம் கேர்ஸ் நிதியை அமைத்திருந்தார், மேலும் நாடு முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் பிரதமருக்கும் மாநில முதல்வர் நிவாரண நிதிகளுக்கும் பங்களிக்கத் தொடங்கினர்.

இப்போது சமீபத்திய செய்தி என்னவென்றால், தல அஜித் பிரதமரின் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 50 லட்சம், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் மற்றும் ஃபெஃப்ஸி ஊழியர்களின் நலனுக்காக 25 லட்சம் என்று 1.25 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

Related Posts