News

அரசியல் திகில் படம் ‘புரவி’

பெண்களுக்கு எதிரான குற்றங்களை சொல்லும் அரசியல் திகில் படமாக, ‘புரவி’ தயாராகிறது. இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ஜி.ஜே.சத்யா கூறுகிறார்:-

“இன்றைய சமூகத்தில் வேகத்துக்கு இணையாக விவேகம் முன்னெடுக்கப்படாத நிலையில், பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிகழ்வுகள் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகின்றன. அரசியல், திகில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய வேடத்தில், ‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷி நடிக்க, அவருடன் சம்பத்ராம், காஜல் பசுபலேட்டி, முக்கிய வேடத்தில் ஆரிப், ரிஷி சுப்பிரமணியம் நடிக்கிறார்கள். எஸ்.சுமதி தயாரிக்கிறார்.

Related Posts