News

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தியாவின் மிக பெரிய சூப்பர்ஸ்டார்’ஸ்!!

கொரோனா வைரஸ் பரவுவதால் உலகம் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்து கோவிட் பற்றி விழிப்புணர்வை “Family” என்ற தலைப்பில் ஒரு குறும்படம் மூலம் ஏற்படுத்த உள்ளனர்.

அமிதாப் பச்சனின் ஆலோசனைகளுடன் பிரசூன் பாண்டே இயக்கியுள்ள இந்த படம், வீட்டில் தங்குவது, பாதுகாப்பாக இருப்பது, சுகாதாரத்தை பேணுதல், வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் சமூக தூரத்தை பராமரிப்பது ஆகியவை பலனளிக்கும் என்பதையும், ஒருவரின் வாழ்க்கையில் தினமும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் திரைப்படம்.

“FAMILY” சோனி நெட்வொர்க் முழுவதும் திங்கள் கிழமை இரவு 9 மணிக்கு திரையிடப்படும்.

நாம் இருக்கும் சூழ்நிலையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, பிக் பி மேற்கொண்ட ஒரு முன்முயற்சிக்கு ‘WE ARE ONE’ சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆதரவு அளித்துள்ளது, இதன் மூலம் நாடு முழுவதும் 1,00,000 வீடுகளின் மாதாந்திர ரேஷன் நிதியளிக்கப்பட வேண்டும்.

Related Posts