News

“இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்” – யுவன் ஷங்கர் ராஜா காட்டம்!

கொரோனா வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய & மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் பாரத பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை மக்களை காணொளி மூலம் சந்தித்தார். அதில் “வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும். இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்” என்றார்.

இந்தியா முழுவதும் பலதரப்பட்ட மக்கள் அவர்களது வீடுகளில் மெழுகுவர்த்திகள், அகல் விளக்குகள் மூலம் தீபம் ஏற்றி தங்கள் ஒற்றுமையை காட்டினார். ஆனால் அதே சமயம், எதிர்ப்பும் தெரிவித்தனர். சிலர் வெடி வெடித்தும், கூட்டம் கூட்டமாக தீ பந்தகளுடன் உலா வந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தர். அப்பதிவில் “இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Related Posts