Movies News

பயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினம், 70ஆவது வருடத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, கல்கி அவர்களின் மனதில் விரிந்த சோழப் பேரரசின் அழகியலையும், பிரம்மாண்டத்தையும் கேமராவுக்குள் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமா பெற்றிருக்கிறது என்றும் சொல்லலாம்,.

 

அந்தப் புதினத்தை படமாக்கும் தைரியம் வந்திருக்கிறது என்றும் சொல்லலாம். தமிழ் எழுத்துலகின் அதிசிறந்த படைப்பாகக் கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கும் விருப்பத்தை பல வருடங்களாக வெளிப்படுத்தி வந்த இயக்குநர் மணிரத்னம் 2018ஆம் ஆண்டு முழுவதும் அதற்கான வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இப்போது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, பேங்காக்கில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டனர்.
அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடிக்கும் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்கும் கார்த்தி மற்றும் பூங்குழலி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஆகியோர் இடம்பெறும் காட்சிகளை பாங்காக்கில் படமாக்கி வருகின்றனர்.
முதல்கட்டமாக ஒரு மாத ஷூட்டிங்கில் ஈடுபட்டிருக்கிறது பொன்னியின் செல்வன் டீம். இவர்களது ஷூட்டிங் முடிந்தபிறகு, அடுத்தடுத்த கேரக்டர்களை வரவழைத்து ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
அனைத்து படக்குழுவினரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அதிக செலவு ஏற்படுத்த வேண்டாம் என்று, எப்படித் தயாராக வேண்டும் என்ற முழு தகவல்களையும் இமெயிலில் அனுப்பி அவர்கள் இருக்குமிடத்திலேயே பயிற்சிகளை செய்யச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
Sending
User Review
0 (0 votes)

Related Posts